உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும் சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே