உலக வாழ்க்கையின் உழலும்என் நெஞ்சம் ஒன்று கோடியாய்ச் சென்றுசென் றுலைந்தே கலக மாயையில் கவிழ்க்கின்ற தெளியேன் கலுழ்கின் றேன்செயக் கடவதொன் றறியேன் இலகும் அன்பர்தம் எய்ப்பினில் வைப்பே இன்ப வெள்ளமே என்னுடை உயிரே திலக மேதிரு ஒற்றிஎம் உறவே செல்வ மேபர சிவபரம் பொருளே