உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக் கலகநிலை அறியாத காட்சி யாகிக் கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி இலகுசிதா காசமதாய்ப் பரமா காச இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி அலகில்அறி வானந்த மாகிச் சச்சி தானந்த மயமாகி அமர்ந்த தேவே