உலகந் தழைக்க உயிர்தழைக்க உணர்வு தழைக்க ஒளிதழைக்க உருவந் தழைத்த பசுங்கொடியே உள்ளத் தினிக்கும் தெள்ளமுதே திலகந் தழைத்த நுதற்கரும்பே செல்வத் திருவே கலைக்குருவே சிறக்கும் மலைப்பெண் மணியேமா தேவி இச்சை ஞானமொடு வலகந் தழைக்குங் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரைஎன்ன வயங்கும் ஒருபே ரருளேஎம் மதியை விளக்கும் மணிவிளக்கே அலகந் தழைக்குந் திருவதிகை ஐயர் விரும்பும் மெய்யுறவே அரிய பெரிய நாயகிப்பெண் ணரசே என்னை ஆண்டருளே