உலகமெலாந் தனிநிறைந்த உண்மை யாகி யோகியர்தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் கலகமுறா உபசாந்த நிலைய தாகிக் களங்கமற்ற அருண்ஞானக் காட்சி யாகி விலகலுறா நிபிடஆ னந்த மாகி மீதானத் தொளிர்கின்ற விளக்க மாகி இலகுபரா பரமாய்ச்சிற் பரமாய் அன்பர் இதயமலர் மீதிருந்த இன்பத் தேவே ஈவச,