உலகமெல்லாம் உடையவரே அணையவா ரீர் உண்மைஉரைக் கின்றவரே அணையவா ரீர் கலகமறுத் தாண்டவரே அணையவா ரீர் கண்ணனைய காதலரே அணையவா ரீர் அலகறியாப் பெருமையரே அணையவா ரீர் அற்புதப்பொற் சோதியரே அணையவா ரீர் இலகுசபா பதியவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்