பாடல் எண் :460
உலகம் பரவும் பரஞ்சோதி உருவாம் குருவே உம்பரிடைக்
கலகம் தருசூர்க் கிளைகளைந்த கதிர்வேல் அரசே கவின்தருசீர்த்
திலகம் திகழ்வாள் நுதற்பரையின் செல்வப் புதல்வா திறல்அதனால்
இலகும் கலப மயிற்பரிமேல் ஏறும் பரிசென் இயம்புகவே
பாடல் எண் :857
உலகம் ஏத்திநின் றோங்க ஓங்கிய ஒளிகொள் மன்றிடை அளிகொள்மாநடம்
இலகு சேவடிக்கே அன்பு கூர்ந்திலை ஏழை நெஞ்சே
திலக வாணுத லார்க்கு ழன்றினை தீமை யேபுரிந் தாய்வி ரிந்தனை
கலக மேகனித்தாய் என்னை காண்நின் கடைக்க ருத்தே
திருச்சிற்றம்பலம்
சென்னைச் சபாபதி முதலியார் வீட்டுத் திருமண அழைப்புத் தொடர்பாகச் செய்த
பாடல் என இது ஒரு தனிப்பாடலாகவும் வழங்குகிறது தொவே ,,சமுக
பதிப்புகளில் இது இப்பதிகத்தில் சேரவில்லை ஆபாபதிப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறது
அறுசீர் தொவே , எண்சீர் சமுக ஆ பா எழுசீர்
தொவே , அறுசீர் சமுக ஆபா ஆசிரியத் தாழிசை தொவே
, சமுக
அவத்தொழிற் கலைசல்
திருவொற்றியூர்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :1613
உலகம் உடையார் என்னுடைய
உள்ளம் உடையார் ஒற்றியினார்
அலகில் புகழார் என்தலைவர்
அந்தோ இன்னும் அணைந்திலரே
கலகம் உடையார் மாதர்எலாம்
கல்நெஞ் சுடையார் தூதர்எலாம்
திலக முகத்தாய் என்னடிநான்
செய்வ தொன்றும் தெரிந்திலனே
பாடல் எண் :1696
உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும்
அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும்
திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும்
கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே
பாடல் எண் :2552
உலகம் பரவும் பொருள்என் கோஎன் உறவென்கோ
கலகம் பெறும்ஐம் புலன்வென் றுயரும் கதிஎன்கோ
திலகம் பெறுநெய் எனநின் றிலகும் சிவம்என்கோ
இலகைங் கரஅம் பரநின் தனைஎன் என்கேனே
பாடல் எண் :4048
உலகம் எலாந்தொழ உற்ற தெனக்குண்மை ஒண்மைதந்தே
இலக எலாம்படைத் தாருயிர் காத்தருள் என்றதென்றும்
கலகம் இலாச்சுத்த சன்மார்க்க சங்கம் கலந்ததுபார்த்
திலகம் எனாநின்ற துத்தர ஞான சிதம்பரமே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.