உலகுபுகழ் திருவமுதம் திருச்சிற்றம் பலத்தே உடையவர்இன் றுதவினர்நான் உண்டுகுறை தீர்ந்தேன் இலகுசிவ போகவடி வாகிமகிழ் கின்றேன் இளைப்பறியேன் தவிப்பறியேன் இடர்செய்பசி அறியேன் விலகல்இலாத் திருவனையீர் நீவிர்எலாம் பொசித்தே விரைந்துவம்மின் அம்பலத்தே விளங்குதிருக் கூத்தின் அலகறியாத் திறம்பாடி ஆடுதும்நாம் இதுவே அருள்அடையும் நெறிஎனவே தாகமம்ஆர்ப் பனவே