உலகுயிர் தொறும்நின் றூட்டுவித் தாட்டும் ஒருவனே உத்தம னேநின் இலகுமுக் கண்ணும் காளகண் டமும்மெய் இலங்குவெண் ணீற்றணி எழிலும் திலகஒள் நுதல்உண் ணாமுலை உமையாள் சேரிடப் பாலுங்கண் டடியேன் கலகஐம் புலன்செய் துயரமும் மற்றைக் கலக்கமும் நீக்குமா அருளே