உளந்தளர விழிசுருக்கும் வஞ்சர் பால்சென் றுத்தமநின் அடியைமறந் தோயா வெய்யில் இளந்தளிர்போல் நலிந்திரந்திங் சூழலும் இந்த ஏழைமுகம் பார்த்திரங்காய் என்னே என்னே வளந்தருசற் குணமலையே முக்கட் சோதி மணியின்இருந் தொளிர்ஒளியே மயிலு ர் மன்னே தளந்தரும்பரூஙதஇம் பொழில்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே