உளவறிந்தோர் தமக்கெல்லாம் உபநிடதப் பொருளாய் உளவறியார்க் கிகபரமும் உறுவிக்கும் பொருளாய் அளவறிந்த அறிவாலே அறிந்திடநின் றாடும் அடிமலர்கள் வருந்தியிட நடந்திரவில் அடைந்து களவறிந்தேன் தனைக்கூவிக் கதவுதிறப் பித்துக் கையில்ஒன்று கொடுத்தாய்நின் கருணையைஎன் என்பேன் விளவெறிந்தோன் அயன்முதலோர் பணிந்தேத்தப் பொதுவில் விளங்குநடம் புரிகின்ற துளங்கொளிமா மணியே