உள்ள தோதினால் ஒறுக்கிலேம் என்பர் உலகு ளோர்இந்த உறுதிகொண் டடியேன் கள்ளம் ஓதிலேன் நும்மடி அறியக் காம வேட்கையில் கடலினும் பெரியேன் வள்ள லேஉம தருள்பெறச் சிறிது வைத்த சிந்தையேன் மயக்கற அருள்வீர் நள்ளல் உற்றவர் வாழ்ஒற்றி உடையீர் ஞான நாடகம் நவிற்றுகின் றீரே