உள்ளதாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல் உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய் நள்ளதாய் எனதாய் நானதாய்த் தளதாய் நவிற்றருந் தானதாய் இன்ன விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால் வெறுவெளி சிவஅனு பவம்என் றுள்ளுற அளித்த ஞானசம் பந்த உத்தம சுத்தசற் குருவே