உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம் ஒருசிவ மயமென உணர்ந்தேன் கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும் கருத்தயல் கருதிய துண்டோ வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன் மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன் தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின்கடன் சிவனே
உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக் குள்ள துரைசெய்தீர் வாரீர் வள்ளல் விரைந்திங்கு வாரீர் வாரீர்