உள்ளமனக் குரங்காட்டித் திரியும் என்றன் உளவறிந்தோ ஐயாநீ உன்னைப் போற்றார் கள்ளமனக் குரங்குகளை ஆட்ட வைத்தாய் கடையனேன் பொறுத்துமுடி கில்லேன் கண்டாய் தெள்ளமுதப் பெருங்கடலே தேனே ஞானத் தெளிவேஎன் தெய்வமே தேவர் கோவே தள்ளரிய புகழ்த்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே