உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம் உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக் கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன் கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே எள்ளலுறப் படுவேன்இங் கேது செய்வேன் எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன் வள்ளலருள் திறநோக்கி நிற்கின் றேன்என் மனத்துயர்போம் வகைஅருள மதித்தி டாயே