உள்ளமுதம் ஊற்றுவிக்கும் உத்தமிஎன் அம்மை ஓங்கார பீடமிசைப் பாங்காக இருந்தாள் தெள்ளமுத வடிவுடையாள் செல்வநல்கும் பதத்தாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்பக் கள்ளமறுத் தருள்விளக்கும் வள்ளன்மணிப் பொதுவில் கால்நிறுத்திக் கால்எடுத்துக் களித்தாடுந் துரையே எள்ளலறப் பாடுகின்றேன் நின்னருளை அருளால் இப்பாட்டிற் பிழைகுறித்தல் எங்ஙனம்இங் ஙனமே