உள்ளலேன் உடையார் உண்ணவும் வறியார் உறுபசி உழந்துவெந் துயரால் வள்ளலே நெஞ்சம் வருந்தவும் படுமோ மற்றிதை நினைத்திடுந் தோறும் எள்ளலேன் உள்ளம் எரிகின்ற துடம்பும் எரிகின்ற தென்செய்வேன் அந்தோ கொள்ளலேன் உணவும் தரிக்கிலேன் இந்தக் குறையெலாம் தவிர்த்தருள் எந்தாய் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்