உள்ளவாம் அண்ட கோடி கோடிகளில் உளவுயிர் முழுவதும் ஒருங்கே கொள்ளைகொண் டிடினும் அணுத்துணை எனினும் குறைபடாப் பெருங்கொடைத் தலைவன் கள்ளநெஞ் சகத்தேன் பிழைஎலாம் பொறுத்துக் கருத்தெலாம் இனிதுதந் தருளித் தள்ளரும் திறத்தென் உள்ளகம் புகுந்தான் தந்தையைத் தடுப்பவர் யாரே