உள்ளானைக் கதவுதிறந் துள்ளே காண உளவெனக்கே உரைத்தானை உணரார் பாட்டைக் கொள்ளானை என்பாட்டைக் குறிக்கொண் டானைக் கொல்லாமை விரதமெனக் கொண்டார் தம்மைத் தள்ளானைக் கொலைபுலையைத் தள்ளா தாரைத் தழுவானை யான்புரிந்த தவறு நோக்கி எள்ளானை இடர்தவிர்த்திங் கென்னை ஆண்ட எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே