உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் ஊரார் ஒப்பென் றொன்றுமிலார் வள்ளால் என்று மறைதுதிக்க வருவார் இன்னும் வந்திலரே எள்ளா திருந்த பெண்களெலாம் இகழா நின்றார் இனியமொழித் தெள்ளார் அமுதே என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே