உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும் உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய் அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர்ந் தாட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே