உள்ளுண்ட உண்மைஎலாம் நான்அறிவேன் என்னை உடையபெருந் தகைஅறிவார் உலகிடத்தே மாயைக் கள்ளுண்ட சிற்றினத்தார் யாதறிவார் எனது கணவர்திரு வரவிந்தக் காலையிலாம் கண்டாய் நள்ளுண்ட மாளிகையை மங்கலங்கள் நிரம்ப நன்குபுனைந் தலங்கரிப்பாய் நான்மொழிந்த மொழியைத் தள்ளுண்டிங் கையமுறேல் நடத்திறைவர் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே