உள்ளுருகுந் தருணத்தே ஒளிகாட்டி விளங்கும் உயர்மலர்ச்சே வடிவருந்த உவந்துநடந் தருளிக் கள்ளமனத் தேனிருக்கும் இடந்தேடி அடைந்து கதவுதிறப் பித்தருளிக் களித்தெனைஅங் கழைத்து நள்ளுலகில் உனக்கிதுநாம் நல்கினம்நீ மகிழ்ந்து நாளும்உயிர்க் கிதம்புரிந்து நடத்திஎன உரைத்தாய் தெள்ளும்அமு தாய்அன்பர் சித்தம்எலாம் இனிக்கும் செழுங்கனியே மணிமன்றில் திருநடநா யகனே