உழைஒன் றணிகைத் தலம்உடையார் ஒற்றி உடையார் என்றனக்கு மழைஒன் றலர்பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி பிழைஒன் றறியேன் பெண்களெலாம் பேசி நகைக்கப் பெற்றேன்காண் குழைஒன் றியகண் மாதேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே