ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன் வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும் மன்றினை மறந்ததிங் குண்டோ ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன் ஐயவோ சிறிதும்இங் காற்றேன் பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் பரிந்தருள் புரிவதுன் கடனே