ஊடுதற்கோர் இடங்காணேன் உவக்கும்இடம் உளதோ உன்னிடமும் என்னிடமும் ஓர்இடம்ஆ தலினால் வாடுதற்கு நேர்ந்திடிலோ மாட்டாமை யாலும் மனம்பிடியா மையினாலும் சினந்துரைத்தேன் சிலவே கூடுதற்கு வல்லவன்நீ கூட்டிஎனைக் கொண்டே குலம்பேச வேண்டாம்என் குறிப்பனைத்தும் அறிந்தாய் நாடுதற்கிங் கென்னாலே முடியாது நீயே நாடுவித்துக் கொண்டருள்வாய் ஞானசபா பதியே