Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :82
ஊணே உடையே பொருளேஎன் றுருகி மனது தடுமாறி
வீணே துயரத் தழுந்துகின்றேன் வேறோர் துணைநின் அடிஅன்றிக்
காணேன் அமுதே பெருங்கருணைக் கடலே கனியே கரும்பேநல்
சேணேர் தணிகை மலைமருந்தே தேனே ஞானச் செழுஞ்சுடரே
பாடல் எண் :2060
ஊணே உடையேஎன் றுட்கருதி வெட்கமிலேன்
வீணேநன் னாளை விடுகின்றேன் - காணேனின்
செம்பாத மேஎன்றுந் தீராப் பொருளென்று
நம்பாத நாயடியேன் நான்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.