ஊண்உ றக்கமே பொருள்என நினைத்த ஒதிய னேன்மனம் ஒன்றிய தின்றாய்க் காணு றக்கருங் காமஞ்சான் றதுகாண் கடைய னேன்செயக் கடவதொன் றறியேன் மாணு றக்களங் கறுத்தசெம் மணியே வள்ள லேஎனை வாழ்விக்கும் மருந்தே சேணு றத்தரும் ஒற்றிநா யகமே செல்வ மேபர சிவபரம் பொருளே