ஊதி யம்பெறா ஒதியினேன் மதிபோய் உழலும் பாவியேன் உண்மைஒன் றறியேன் வாதி யம்புறும் வஞ்சகர் உடனே வாய்இ ழுக்குற வன்மைகள் பேசி ஆதி எம்பெரு மான்உனை மறந்தேன் அன்பி லாதஎன் வன்பினை நினைக்கில் தீதி யம்பிய நஞ்சமும் கலங்கும் திகழும் ஒற்றியூர்த் தியாகமா மணியே