ஊன்உரைக்கும் உயிரளவும் உலகளவும் அறியேன் உன்னளவை அறிவேனோ என்னளவை அறிந்தோய் வான்உரைக்க மாட்டாதே வருந்தினவே மறையும் வகுத்துரைக்க அறியாதே மயங்கினவே அந்தோ கோன்உரைக்கும் குறிகுணங்கள் கடந்தபெரு வெளிமேல் கூடாதே கூடிநின்ற கோவேநின் இயலை நான்உரைக்க நான்ஆரோ நான்ஆரோ நவில்வேன் நான்எனவே நாணுகின்றேன் நடராஜ குருவே