ஊன்கொண்ட தேகத்தும் உள்ளத்தும் மேவி உறும்பிணியால் நான்கொண்ட துன்பம் தவிர்ப்பாய் வயித்திய நாதஎன்றே வான்கொண்ட நின்அருட் சீரேத்து கின்ற வகைஅறியேன் தேன்கொண்ட கொன்றைச் சடையாய் அமரர் சிகாமணியே