ஊன்பார்க்கும் இவ்வூடற் பொய்மையைத் தேர்தல் ஒழிந்தவமே மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கம்அற்றே தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருஅழகை நான்பார்க்கும் நாள்எந்த நாள்மயில் ஏறிய நாயகனே