ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் ஊக்கமும் உண்மையும் என்னைத் தான்பெறு தாயும் தந்தையும் குருவும் தனிப்பெருந் தெய்வமுந் தவமும் வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும் மக்களும் மனைவியும் உறவும் நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே நம்பினேன் கைவிடேல் எனையே