ஊன்மறந்த உயிரகத்தே ஒளிநிறைந்த ஒருவன் உலகமெலாம் உடையவன்என் னுடையநட ராஜன் பான்மறந்த சிறியஇனம் பருவமதின் மாலைப் பரிந்தணிந்தான் தெரிந்ததனிப் பருவமிதிற் பரியான் தான்மறந்தான் எனினும்இங்கு நான்மறக்க மாட்டேன் தவத்தேறி அவத்திழியச் சம்மதமும் வருமோ கோன்மறந்த குடியேபோல் மிடியேன்நான் அவன்றன் குணம்அறிந்தும் விடுவேனோ கூறாய்என் தோழீ