ஊராசை உடலாசை உயிர்பொருளின் ஆசை உற்றவர்பெற் றவராசை ஒன்றுமிலாள் உமது பேராசைப் பேய்பிடித்தாள் கள்ளுண்டு பிதற்றும் பிச்சிஎனப் பிதற்றுகின்றாள் பிறர்பெயர்கேட் டிடிலோ நாராசஞ் செவிபுகுந்தால் என்னநலி கின்றாள் நாடறிந்த திதுஎல்லாம் நங்கைஇவள் அளவில் நீர்ஆசைப் பட்டதுண்டேல் வாய்மலர வேண்டும் நித்தியமா மணிமன்றில் நிகழ்பெரிய துரையே