ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் உறவொன் றில்லார் பகைஇல்லார் பேரும் இல்லார் எவ்விடத்தும் பிறவார் இறவார் பேச்சில்லார் நேரும் இல்லார் தாய்தந்தை நேயர் தம்மோ டுடன்பிறந்தோர் யாரும் இல்லார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே