ஊர்ஆதி இகழ்மாயக் கயிற்றால் கட்டுண் டோ ய்ந்தலறி மனம்குழைந்திங் குழலு கின்றேன் பார்ஆதி அண்டம்எலாம் கணக்கில் காண்போய் பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ சீர்ஆதி பகவன்அருட் செல்வ மேஎன் சிந்தைமலர்ந் திடஊறுந் தேனே இன்பம் சார்ஆதி மலைத்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே