ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார் பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார் சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங் கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே