ஊழை அகற்ற உளவறியாப் பொய்யன்இவன் பீழைமனம் நம்மைப் பெறதம் மனங்கொடிய தாழைஎன எண்ணிஎன்னைத் தள்ளிவிட்டால் என்செய்வேன் ஏழைநான் ஒற்றி எழுத்தறியும் பெருமானே
ஊழை யேமிக நொந்திடு வேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் பாழை யேபலன் தருவதென் றெண்ணிப் பாவி யேன்பெரும் படர்உழக் கின்றேன் மாழை யேர்திரு மேனிஎம் பெருமான் மனம்இ ரங்கிஎன் வல்வினை கெடவந் தேழை யேற்கரு ளாய்எனில் அந்தோ என்செய் கேன்நர கிடைஇடும் போதே