எங்கள் காழிக் கவுணியரை எழிலார் சிவிகை ஏற்றிவைத்தோர் திங்கள் அணியும் செஞ்சடையார் தியாகர் திருவாழ் ஒற்றியினார் அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் அணைத்தார் அல்லர் எனைமடவார் தங்கள் அலரோ தாழாதென் சகியே இனிநான் சகியேனே