எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தே இதுஅது எனஉரைப் பரிதாய்த் தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத் தந்தெனைத் தன்மயம் ஆக்கிப் பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப் புத்தமு தருத்திஎன் உளத்தே அங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்த அருட்பெருஞ் சோதிஎன் அரசே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- இறை இன்பக் குழைவு பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்