எங்கும்விளங் குவதாகி இன்பமய மாகி என்னுணர்வுக் குணர்வுதரும் இணையடிகள் வருந்த பொங்குமிர விடைநடந்து நானுறையும் இடத்தே போந்துமணிக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து தங்குமடி யேனைஅழைத் தங்கையில்ஒன் றளித்தே தயவினொடு வாழ்கஎனத் தனித்திருவாய் மலர்ந்தாய் இங்குநின தருட்பெருமை என்னுரைப்பேன் பொதுவில் இன்பநடம் புரிகின்ற என்னுடைநா யகனே