எஞ்ச வேண்டிய ஐம்புலப் பகையால் இடர்கொண் டோ ய்ந்தனை என்னினும் இனிநீ அஞ்ச வேண்டிய தென்னைஎன் நெஞ்சே அஞ்சல் அஞ்சல்காண் அருமறை நான்கும் விஞ்ச வேண்டியும் மாலவன் மலரோன் விளங்க வேண்டியும் மிடற்றின்கண் அமுதா நஞ்சை வேண்டிய நாதன்தன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே