எணங்குறியேன் இயல்குறியேன் ஏதுநினை யாதே என்பாட்டுக் கிருந்தேன்இங் கெனைவலிந்து நீயே மணங்குறித்துக் கொண்டாய்நீ கொண்டதுதொட் டெனது மனம்வேறு பட்டதிலை மாட்டாமை யாலே கணங்குறித்துச் சிலபுகன்றேன் புகன்றமொழி எனது கருத்தில்இலை உன்னுடைய கருத்தில்உண்டோ உண்டேல் குணங்குறிப்பான் குற்றம்ஒன்றுங் குறியான்என் றறவோர் கூறிடும்அவ் வார்த்தைஇன்று மாறிடுமே அரசே