எண்கடந்த உயிர்கள்தொறும் ஒளியாய் மேவி இருந்தருளும் பெருவாழ்வே இறையே நின்றன் விண்கடந்த பெரும்பதத்தை விரும்பேன் தூய்மை விரும்புகிலேன் நின்அருளை விழைந்தி லேன்நான் பெண்கடந்த மயல்எனும்ஓர் முருட்டுப் பேயாற் பிடிஉண்டேன் அடிஉண்ட பிஞ்சு போன்றேன் கண்கடந்த குருட்டூமர் கதைபோல் நின்சீர் கண்டுரைப்பல் என்கேனோ கடைய னேனே வேறு