எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும் அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே