எண்ணாத மந்திரமே எழுதாத மறையே ஏறாத மேனிலைநின் றிறங்காத நிறைவே பண்ணாத பூசையிலே படியாத படிப்பே பாராத பார்வையிலே பதியாத பதிப்பே நண்ணாத மனத்தகத்தே அண்ணாத நலமே நாடாத நாட்டகத்தே நடவாத நடப்பே அண்ணாஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே அடிஇணைக்கென் சொன்மாலை அணிந்துமகிழ்ந் தருளே