Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1448
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குன்அருள் 
பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும் 
புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால் 
மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :3496
எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் 

இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே 

நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் 

தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் 

ஐயகோ வாடுதல் அழகோ
பாடல் எண் :3829
எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத் 

திசைந்தபேர் இன்பமே யான்தான் 
பண்ணிய தவமே தவத்துறும் பலனே 

பலத்தினால் கிடைத்தஎன் பதியே 
தண்ணிய மதியே மதிமுடி அரசே 

தனித்தசிற் சபைநடத் தமுதே 
புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம் 

புணர்ந்தருள் புணர்ந்தருள் எனையே
பாடல் எண் :4333
எண்ணிய வாறே எனக்கருள் பாதம் 
இறவா நிலையில் இருத்திய பாதம் 
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம் 
பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்  ஆடிய
பாடல் எண் :4348
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம் 
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே  அபயம்
பாடல் எண் :4613
எண்ணிய எண்ணங்கள் எல்லாம் - நான் 

எண்ணிய வாறே இனிதுதந் தென்னைத் 
திண்ணியன் ஆக்கிற்றுப் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி
பாடல் எண் :5222
எண்ணிய நானே திண்ணியன் ஆனேன் 
எண்ணிய வாறே நண்ணிய பேறே 
புண்ணியன் ஆனேன் அண்ணியன் ஆனேன் 
புண்ணிய வானே புண்ணிய வானே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.