எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம் எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம் நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம் நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம் பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம் பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம் திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்